< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூரில் திடீரென 50 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்
மாநில செய்திகள்

திருச்செந்தூரில் திடீரென 50 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்

தினத்தந்தி
|
29 Oct 2024 2:54 PM IST

ஆபத்தை உணராமல் பாறைகளின் மேல் ஏறி நின்று பக்தர்கள் செல்பி எடுத்தனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், முந்திய நாட்கள், பிந்திய நாட்களில் காலையில் கடல்நீர் உள்வாங்குவதும், பின்னர் மாலையில் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

நாளை மறுநாள் அமாவாசை தினமாகும். இதனை முன்னிட்டு இன்று காலையில் திடீரென கடல் நீர் உள்வாங்க தொடங்கியது. பின்னர் சுமார் 50 அடி தூரம் கடல் நீர் உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.

ஆனாலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி பாறையில் நடந்து சென்று ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். மேலும் பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்