< Back
மாநில செய்திகள்
தொடர் மழை - சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை
மாநில செய்திகள்

தொடர் மழை - சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

தினத்தந்தி
|
12 Nov 2024 6:47 AM IST

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இந்நிலையில்,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் தற்போது வரை விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு, கிண்டி, ஆலந்தூர்,வடபழனி, வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி,மாங்காடு, குன்றத்தூர் மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா என எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என அவர் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என அம்மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்