< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டையில் மழை காரணமாக இன்று 3 மணியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை

கோப்புப்படம்

மாநில செய்திகள்

புதுக்கோட்டையில் மழை காரணமாக இன்று 3 மணியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை

தினத்தந்தி
|
26 Nov 2024 1:54 PM IST

கனமழை எதிரொலியாக புதுக்கோட்டையில் இன்று மதியம் 3 மணியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தென்கிழக்கு வங்கக்கடல் உருவான காற்றழுத்த மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ள 'பெங்கல்' என பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும், சென்னை- புதுச்சேரி இடையே கரையை கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் எனவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சூழலில் மாலை 4 மணி வரை நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்பட மொத்தம் 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கனமழை எதிரொலியாக புதுக்கோட்டையில் இன்று மதியம் 3 மணியுடன் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மாணவர்கள் பாதுகாப்பாக வீடு செல்வதை உறுதி செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் முதன்மை கல்வி அலுவலர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்