< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தொடர் விடுமுறைக்கு பிறகு விழுப்புரத்தில் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு
|9 Dec 2024 8:35 AM IST
10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம்,
பெஞ்சல் புயல் காரணமாக பெய்த அதிகனமழையால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த மழை, வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வந்து கொண்டு இருக்கின்றனர். கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மழைநீர் வடிந்து சகஜநிலை திரும்பிய நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வருகின்றனர். திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 7 பள்ளிகள் மட்டும் திறக்கப்படவில்லை. மறுசீரமைப்பு பணிகள் முடிந்ததும் இந்த பகுதிகளிலும் ஓரிரு நாட்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.