< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
|23 Nov 2024 6:41 AM IST
வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெற இருக்கும்நிலையில் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி,
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழைபொழிந்து வருகிறது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20-ம் தேதி தென்காசி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதை ஈடு செய்யும் வகையில் இன்று (சனிக்கிழமை) பள்ளி வேலைநாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் முகாம் இருப்பதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வரும் 30ம் தேதி பள்ளிகள் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.