< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நெல்லையில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
|15 Dec 2024 10:09 PM IST
நெல்லையில் நாளை பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் தற்போது மழைப்பொழிவு முற்றிலும் நின்றுள்ளது. இதையடுத்து நெல்லையில் நாளை பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
அதே சமயம், தாமிரபரணி கரையோர பகுதிகளில் உள்ள பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். பள்ளிகளில் நீர் தேங்கியிருந்தால் முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவித்து விடுமுறை அளிக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.