< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; சத்துணவு அமைப்பாளர் கைது
மாநில செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; சத்துணவு அமைப்பாளர் கைது

தினத்தந்தி
|
23 Feb 2025 10:52 AM IST

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சத்துணவு அமைப்பாளர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் இடும்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்(வயது 59). இவர் அரசு பள்ளி ஒன்றில் சத்துணவு அமைப்பாளராக உள்ளார். இன்னும் 3 மாதத்தில் பணி ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு சரவணன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கிடையே பள்ளியில், பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வந்த அதிகாரிகளிடம் இதுகுறித்து அந்த மாணவி தெரிவித்துள்ளார். அவர்கள் இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஜோதியிடம் புகார் அளித்தனர்.

அவர் மாணவியிடம் விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து அவர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்