< Back
மாநில செய்திகள்
பழுதாகி நின்ற அரசு பஸ்சை தள்ளிச்சென்ற பள்ளி மாணவர்கள்
மாநில செய்திகள்

பழுதாகி நின்ற அரசு பஸ்சை தள்ளிச்சென்ற பள்ளி மாணவர்கள்

தினத்தந்தி
|
27 Nov 2024 3:17 AM IST

திருப்பூரில் பழுதாகி நின்ற அரசு பஸ்சை பள்ளி மாணவர்கள் தள்ளிச் சென்றனர்.

திருப்பூர்,

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பஸ் இயக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நகர பஸ்சையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த மாநகர பஸ்கள் பெரும்பாலும் பழுதடைந்து முறையான பராமரிப்பு இன்றி இயக்கப்பட்டு வருகிறது. இதனால் திருப்பூரின் பல பகுதிகளில் நகர பஸ்கள் பழுதாகி நிற்கின்ற சம்பவம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை குமரன் சாலையில் சென்ற நகர பஸ் வளர்மதி பாலம் அருகே பழுதாகி நின்றது. பஸ் நிலையம் அருகில் இருந்ததால் பெரும்பாலான பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றனர். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பஸ்சை ஓரமாக தள்ளிச் சென்றனர். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்