< Back
மாநில செய்திகள்
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்; ஏப்ரல் மாதத்திற்குள் அமல் - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
மாநில செய்திகள்

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்; ஏப்ரல் மாதத்திற்குள் அமல் - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

தினத்தந்தி
|
3 Dec 2024 7:51 PM IST

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் 2025 ஏப்ரல் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருவாரூர், நாகை, தேனி, தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில், காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான வழக்கு தொடர்பான விசாரணை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், வரும் 2025 ஏப்ரல் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த திட்டம் மூலம் அரசுக்கு இதுவரை 45 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த திட்டம் காரணமாக டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் பணிச்சுமை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்