போத்தீஸ் மற்றும் மின்மினி செயலி இணைந்து நடத்திய கல்லூரி மாணவிகளுக்கான சேலை தின சிறப்பு நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு!
|சென்னை, டிசம்பர் 27, 2024: நம் பண்பாட்டின் அடையாளமாகவும், பெண்களின் வாழ்வின் அங்கமாகவும் விளங்கும் சேலையை கௌரவிக்கும் விதமாக, ஆடை ரகங்களின் தன்னிகரற்ற அடையாளமான போத்தீஸ் மற்றும் மின்மினி செயலி இணைந்து நடத்திய போத்தீஸ் சேலை தினம் 2024 நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி 20-12-2024 அன்று மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் முன்னணி திரை மற்றும் சமூக வலைதள பிரபலங்கள், 20 கல்லூரிகளைச் சேர்ந்த 1000--க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், மற்றும் கல்லூரி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வாக்கத்தான்:
சேலை தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் அனைவரும் சேலை அணிந்து நடந்து செல்லும் வாக்கத்தானிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடிகை சனம் ஷெட்டி வாக்கத்தான் நிகழ்ச்சியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் 800-க்கும் மேற்பட்ட மாணவிகளும் கல்லூரிகளின் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். வாக்கத்தான் நிறைவாக டிஜே ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பு நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதில் அனைவரும் நடனமாடியது, கலந்து கொண்ட அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. வாக்கத்தானில் கலந்து கொண்ட அனைவருக்கும் மெடல்களும் சர்டிபிகேட்களும் வழங்கப்பட்டது.
இறுதி போட்டி நிகழ்வுகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்:
காலை 10 மணி அளவில் சேலை தின சிறப்பு நிகழ்ச்சி நடிகை சனம் செட்டி, சுஜா வருணி மற்றும் மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரியின் டீன் திரு வெங்கட்ராமன் அவர்களால் குத்துவிளக்கேற்றி துவங்கப்பட்டது. முதல் போட்டியாக நடன நிகழ்ச்சி நடைபெற்றது நடன நிகழ்ச்சிக்கு நடிகை சுஜா வருணி தலைமை தாங்கினார். 20-ற்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டு நடனம் ஆடினர். நடன போட்டியில்
- முதல் பரிசு: அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி
- இரண்டாம் பரிசு: எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- மூன்றாம் பரிசு: அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியின் இரண்டாம் அணி
வெற்றி பெற்றனர்.
விவாதப்போட்டி:
நடன போட்டியின் தொடர்ச்சியாக விவாத போட்டி நடைபெற்றது. விவாத போட்டியின் தலைப்பாக, "சேலை கட்டியவுடன் அழகாக தெரிவது எந்த ஜெனெரேஷன் பெண்கள்? 1980-90's பெண்களா அல்லது 2000 ஆண்டில் பிறந்த பெண்களா", வழங்கப்பட்டது. இதில் மாணவிகள் 40க்கும் மேற்பட்டோர் சுவாரசியமாக விவாதித்தனர். இப்போட்டிக்கு பிக் பாஸ் பிரபலம் RJ ஆனந்தி தலைமை தாங்கி போட்டியில் வெற்றி பெற்றவர்களை அறிவித்தார்.
- முதல் பரிசு: எஸ்.டி.என்.பி. வைஷ்ணவ் மகளிர் கல்லூரி – மோனிஷா
- இரண்டாம் பரிசு: ஐ.எஸ்.எஸ்.எம். பிஸ்னஸ் ஸ்கூல் – சாய் உபசனா
- மூன்றாம் பரிசு: எத்திராஜ் மகளிர் கல்லூரி – நித்யா ஜனனி
சாரி ட்ராப்பிங் போட்டி:
இதன் தொடர்ச்சியாக சாரி ட்ராப்பிங் போட்டி நடைபெற்றது. இப்போட்டியின் நடுவர்களாக சென்னையின் பிரபல பெண் டி.ஜே. தீபிகா மற்றும் புகழ் பெற்ற ஜும்பா பயிற்சியாளர் சுமையா நாஸ் நடுவர்களாக கலந்து கொண்டனர். இப்போட்டியில் 90-க்கும் மேற்பட்ட மாணவிகள் விதவிதமாக சேலை கட்டி மேடையில் அணிவகுத்தனர். சாரி ட்ராப்பிங் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்:
- முதல் பரிசு: மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரியின் – சைத்தான கிருஷ்ணா
- இரண்டாம் பரிசு: டாக்டர் எம் .ஜி. ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி – மிருதுளா பாஷினி
- மூன்றாம் பரிசு: மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரியின் – அதிதி ஜெயின்
இதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவின் சிறப்பு விருந்தினர்களாக போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. ரமேஷ் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் ஜெயின் கல்லூரியின் தாளாளர், தலைவர் மற்றும் தினத்தந்தியின் அங்கமான மின்மினி ஆப்-பின் விற்பனை பிரிவு தலைமை அதிகாரி திரு வெங்கட் சுந்தரநாத் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். அனைத்து போட்டிகளுக்கும் முதல் பரிசாக ரூ.15,000 மதிப்புள்ள போத்தீஸ் கிப்ட் வவுச்சர், இரண்டாம் பரிசாக ரூ.10,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய பின் போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.ரமேஷ் அவர்கள் பேசுகையில்,"நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சேலை தமிழர்களின் முக்கிய அங்கமாக திகழ்கிறது. சேலையை கௌரவிக்கும் விதமாக உலக சேலை தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த உலக சேலை தினத்தில் போத்தீஸ், தினத்தந்தியின் அங்கமான மின்மினி நிறுவனத்துடன் இணைந்து இது போன்ற புதுமையான நிகழ்ச்சியை நடத்துவது பெருமைக்குரிய விஷயமாகும். அடுத்த ஆண்டு முதல் இது போன்ற நிகழ்ச்சிகளை மாநிலம் முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் மாணவிகளை ஊக்குவித்த கல்லூரி நிர்வாகத்தையும் பாராட்டுகிறேன். இந்த நிகழ்ச்சியின் வெற்றியை கலந்து கொண்ட அனைவரின் முகங்களிலும் காணமுடிகிறது", என குறிப்பிட்டார். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக ராஸ் மட்டாஸ் நிறுவனர் திரு. ஜோ மைக்கேல் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
#PothysSareeDay போட்டி வெற்றியாளர்கள்:
உலக சேலை தினத்தை அனைத்து தரப்பு பெண்களும் கொண்டாடும் வகையில் சமூக ஊடகத்தில் #PothysSareeDay போட்டி நடத்தப்பட்டது. இதற்காக கடந்த 15 நாட்களில் 400-க்கும் மேற்பட்ட எண்ட்ரிகள் பெறப்பட்டது. முதல் பரிசு: அக்ஷயா, இரண்டாம் பரிசு: அதிதி ஜெயின், மூன்றாம் பரிசு: தாரிணி பவித்ரா ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
உலக சேலை தின சிறப்பு நிகழ்ச்சி நிறைவாக டிஜே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் டிஜே தீபிகா அவர்கள் அரங்கத்தில் உள்ள அனைவரையும் உற்சாகத்துடன் நடனம் ஆட வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் இதுபோன்று புதுமையான நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தங்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக உள்ளது. மேலும் இதுபோன்று பல நிகழ்ச்சிகளை போத்தீஸ் நிறுவனமும் மின்மினி நிறுவனமும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.