< Back
மாநில செய்திகள்
சேலம்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
மாநில செய்திகள்

சேலம்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
17 Nov 2024 2:26 AM IST

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சிறுவாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகன் குமரேசன் (வயது 30). சரக்கு வேன் டிரைவரான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா மலைவேப்பன்குட்டை பகுதியை சேர்ந்த சிறுமியை திருமணம் செய்துள்ளார். அக்கம்பக்கத்தினர் யாருக்கும் தெரியாமல் குமரேசன் அந்த சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமி கர்ப்பம் தரித்தார். இந்த நிலையில் அந்த சிறுமியை பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

அங்கு அவர் 17 வயது மட்டுமே ஆன சிறுமி என்பதால் இது தொடர்பாக டாக்டர்கள் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் குழந்தை திருமணம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கியதாக குமரேசன் உட்பட 5 பேர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்