< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மாணவனை கால் அழுத்த சொல்லி ஓய்வெடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம்
|22 Nov 2024 7:23 PM IST
மாணவன் ஆசிரியருக்கு கால் அழுத்தும் வீடியோ வைரலான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் கிழக்கு ராஜபாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை தனக்கு கால் அழுத்திவிட சொல்லிவிட்டு ஓய்வெடுக்கும் கணக்கு ஆசிரியர் ஜெயபிரகாஷின் வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இவர் குடிபோதையில் பள்ளியில் தூங்குவதாகவும் கூறப்படும் நிலையில் வைரலாகும் வீடியோ குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், மாணவர்களை கால் அழுத்த கூறிய ஆசிரியர் ஜெயப்பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். மாணவன் ஆசிரியருக்கு கால் அழுத்தும் வீடியோ வைரலான நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.