< Back
மாநில செய்திகள்
சேலம்: கெங்கவல்லி பகுதியில் சிறுத்தை நடமாட்டம்?

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

சேலம்: கெங்கவல்லி பகுதியில் சிறுத்தை நடமாட்டம்?

தினத்தந்தி
|
11 Nov 2024 9:31 AM IST

கெங்கவல்லி பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் என்று தகவல் பரவியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கெங்கவல்லி,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் கடந்த மாதம் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்தனர். ஆனால் அந்த பகுதியில் சிறுத்தை இல்லை என்பது தெரியவந்தது.

இதனிடையே நேற்று வலசக்கல்பட்டி ஏரி பகுதியில் சிறுத்தை நடமாட்டத்திற்கான கால் தடம் இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறை அலுவலர்கள் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என கண்காணித்தனர். கெங்கவல்லி பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் என்று தகவல் பரவியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்