< Back
மாநில செய்திகள்
SA Chandrasekhars response to the question about Vijays meeting with Governor R.N. Ravi
மாநில செய்திகள்

கவர்னர் ஆர்.என்.ரவியை விஜய் சந்தித்தது குறித்த கேள்விக்கு எஸ்.ஏ சந்திரசேகர் கொடுத்த பதில்

தினத்தந்தி
|
4 Jan 2025 10:58 AM IST

எஸ்.ஏ சந்திரசேகர், அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக எதிர்கட்சியினர் நடத்தும் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

சென்னை ,

இன்று சென்னை விமானநிலையம் வந்த விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர், அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக எதிர்கட்சியினர் நடத்தும் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'நல்ல விஷயத்திற்காக நல்லவர்கள் போராடுகிறார்கள். அவ்வளவுதான் ' என்றார்.

தொடர்ந்து, கவர்னருடனான விஜய்யின் சந்திப்பு குறித்த கேள்விக்கு, 'அரசியலுக்கு வந்துவிட்டார், அப்போது இதையெல்லாம் செய்துதானே ஆக வேண்டும்' என்றார்.

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பல்வேறு எதிர்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை கண்டித்து கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்திருந்தார்.

மேலும் செய்திகள்