< Back
மாநில செய்திகள்
பழனி முருகன் கோவிலுக்கு 6 அடி உயர வேலை காணிக்கையாக வழங்கிய ரஷிய பக்தர்கள்
மாநில செய்திகள்

பழனி முருகன் கோவிலுக்கு 6 அடி உயர வேலை காணிக்கையாக வழங்கிய ரஷிய பக்தர்கள்

தினத்தந்தி
|
27 Nov 2024 5:21 AM IST

பழனி முருகன் கோவிவில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

பழனி,

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அதேபோல் மலேசியா, சிங்கப்பூர், இத்தாலி, ரஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த நிலையில் ரஷியாவை சேர்ந்த பெண்கள் உள்பட 5 பக்தர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்தனர். அவர்கள் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் மற்றும் நவக்கிரக கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ரஷிய பக்தர்கள் நேற்று காலை பழனி முருகன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் 6 அடி உயரம், 12 கிலோ எடை கொண்ட பித்தளை வேலை கொண்டு வந்திருந்தனர்.

பின்னர் அவர்கள் படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று, அங்கு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பின்னர் மலைக்கோவிலில் உள்ள அலுவலகத்தில் தாங்கள் கொண்டு வந்த வேலை காணிக்கையாக செலுத்தினர். வெளிநாட்டு பக்தர்கள் வேலுடன் பழனி மலைக்கோவிலில் தரிசனம் செய்ய வருகை தந்தது, மற்ற பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்