பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,000 ரொக்கத் தொகை- ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
|பொங்கல் பரிசு தொகுப்பில் பொங்கலுக்கு தேவையான பொருள்கள் மட்டும் அறிவிக்கப்பட்டது.
சென்னை,
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. பொங்கலுக்கு தேவையான பொருள்களுடன் சேர்த்து கடந்த ஆண்டு 1,000 ரூபாய் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்த சூழலில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் பொங்கலுக்கு தேவையான பொருள்கள் மட்டும் அறிவிக்கப்பட்டது. ரொக்கப் பணம் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,000 ரொக்க தொகை வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார் .அந்த மனுவில்,
தேர்தல் நேரங்களில் மட்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படுகிறது.பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2000 ரொக்கத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும். என குறிப்பிடப்பட்டுள்ளது.