< Back
மாநில செய்திகள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ரூ.2,000 நிவாரண நிதி போதாது - அண்ணாமலை
மாநில செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 நிவாரண நிதி போதாது - அண்ணாமலை

தினத்தந்தி
|
3 Dec 2024 4:26 PM IST

வெள்ள பாதிப்புகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் பார்வையிட்டார்

சென்னை,

பெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. கனமழை, வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், விழுப்புரம், கடலூர் , கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .

இந்த நிலையில், கடலூரில் வெள்ள பாதிப்புகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் பார்வையிட்டார் . தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை கூறியதாவது,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 நிவாரணம் போதாது. குடும்ப அட்டைக்கு தலா ரூ.10,000 வழங்க வேண்டும் . பேரிடர் நிவாரண நிதியாக அக்டோபரில் ரூ.944 கோடியை தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது . மத்திய அரசு குற்றம் குறை இல்லாமல் தமிழகத்துக்கு நிதி உதவி அளித்து வருகிறது என தெரிவித்தார் .

.

மேலும் செய்திகள்