< Back
மாநில செய்திகள்
விருதுநகர் மாவட்ட பாசனத்திற்காக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

விருதுநகர் மாவட்ட பாசனத்திற்காக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு

தினத்தந்தி
|
15 Nov 2024 7:13 PM IST

பிளவுக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட பாசனத்திற்காக அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

"விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம். சாஸ்தாகோவில் நீர்த்தேக்கத்திலிருந்து 7 நாட்களுக்கு (18.11.2024 முதல் 24.11.2024 வரை) விநாடிக்கு 50 க.அடி வீதம் தண்ணீர் திறந்து விடவும், மீதம் நீர் இருக்கும் வரை 41 நாட்களுக்கு (25.11.2024 முதல் 04.01.2025 வரை) நீர் வரத்து மற்றும் நீர் இருப்பைப் பொறுத்து தண்ணீர் வழங்கவும், மொத்தம் 48 நாட்கள் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் விருதுநகர் மாவட்டம், இராஜபாளைய வட்டத்தில் வடக்கு தேவதானம், தெற்கு தேவதானம், சேத்தூர், முத்துசாமிபுரம், நல்லமங்கலம், செட்டியார்பட்டி, கோவிலூரில் உள்ள 3130.68 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

அதேபோல, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவுக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து பிளவுக்கல் திட்டத்தில் பாசன வசதி பெறும் கண்மாய்களுக்கு வினாடிக்கு 150 க.அடிவீதம் 18.11.2024 முதல் 6 நாட்களுக்கு மற்றும் பெரியாறு கால்வாய் நேரடி பாசனத்திற்கு வினாடிக்கு 3 க.அடிவீதம் 18.11.2024 முதல் 28.02.2025 வரையிலும் தண்ணீர் திறந்துவிடவும், மேலும் நீர்வரத்து மற்றும் தண்ணீரின் இருப்புபொறுத்து அனைத்து கண்மாய் பாசனத்திற்கும் தொடர்ந்து 28.02.2025 வரை தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. 88 இதன் மூலம் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம் 2) எஸ்.கொடிக்குளம் 3) கூமாபட்டி 4) வத்திராயிருப்பு , 1) கான்சாபுரம் 5) வ.புதுப்பட்டி 6) மகாராஜபுரம் 7) சுந்தரபாண்டியம் 8) குன்னூர் 9) நத்தம்பட்டி 10) பாட்டகுளம் சல்லிபட்டி 11) செம்மாண்டி கரிசல்குளம் 12) விழுப்பனூர் 13) தச்சகுடி 14) கிருஷ்ணபேரி 15) கரிசல்குளம் 16) மூவரைவென்றான் 17) மங்கலம் 18) நெடுங்குளம் ஆகிய கிராமங்களிலுள்ள 3170.89 ஹெக்டேர் நிலங்கள் பாசனவசதி பெறும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்