< Back
மாநில செய்திகள்
தொழில்துறை வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆய்வு
மாநில செய்திகள்

தொழில்துறை வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆய்வு

தினத்தந்தி
|
5 Nov 2024 6:31 AM IST

கோவை மாவட்ட தொழில்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆலோசனை நடத்தினார்.

கோவை,

தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நேற்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில், கோவை மாவட்ட தொழில்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கோவையில் தொழில்துறையில் உள்ள பிரச்சினைகள், அதை தீர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், விமான நிலைய விரிவாக்கத்துக்கு மாநில அரசு செய்ய வேண்டிய அடுத்த கட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இன்று முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பங்கேற்கிறார். சூலூர் வாரப் பட்டியில் அமைக்கப்பட உள்ள தொழில் பேட்டை இடத்தையும் அவர் பார்வையிடுகிறார்.

மேலும் செய்திகள்