< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சரின் செயலாளர்களின் துறைகள் மாற்றியமைப்பு
மாநில செய்திகள்

முதல்-அமைச்சரின் செயலாளர்களின் துறைகள் மாற்றியமைப்பு

தினத்தந்தி
|
16 Dec 2024 7:08 PM IST

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களுக்கான துறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. முதல்-அமைச்சரின் செயலாளர் அனு ஜார்ஜ் 136 நாட்கள் விடுப்பில் செல்வதையொட்டி துறைகள் மாற்றப்பட்டுள்ளன.

* முதலமைச்சரின் தனிச் செயலாளர் (1) உமாநாத்திற்கு நிதி, மின்சாரம், உள்துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணி என 17 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

* முதலமைச்சரின் தனிச்செயலாளர் (2) சண்முகத்திற்கு வேளாண்மை, கூட்டுறவு, உயர்கல்வி, மருத்துவம், சட்டம் உள்ளிட்ட 16 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

* முதலமைச்சரின் இணைச் செயலாளர் லட்சுமிபதிக்கு சுற்றுச்சூழல், தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து உள்ளிட்ட 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்