< Back
மாநில செய்திகள்
கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை

தினத்தந்தி
|
4 Nov 2024 6:35 AM IST

கும்பக்கரை அருவியில் நேற்று மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தேனி,

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். பலத்த மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால், அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்