< Back
மாநில செய்திகள்
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை ஆமைகள் பறிமுதல்
மாநில செய்திகள்

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு கடத்திவரப்பட்ட அரிய வகை ஆமைகள் பறிமுதல்

தினத்தந்தி
|
29 Dec 2024 8:24 PM IST

கோலாலம்பூரில் இருந்து ஆமைகளை கடத்திவந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு பேட்டிக் ஏர் விமானத்தின் மூலம் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், சாக்லேட் பெட்டிகளைப் போன்ற அட்டைப் பெட்டிகளில் கடத்தி வந்த 2,447 சிவப்பு காது ஆமைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோலாலம்பூரில் இருந்து ஆமைகளை கடத்திவந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவப்பு காது ஆமைகளை இந்தியாவிற்குள் கொண்டு வர ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை அதிவேகமாக வளரக்கூடியவை. இதனால், வீட்டில் வளர்க்க முடியாமல் பெரும்பாலானோர் அக்கம் பக்கத்தில் இருக்கும் நீர்நிலைகளில் கொண்டு சென்று விட்டு விடுகின்றனர். அங்கு இவை, இந்திய ஆமைகளின் வாழ்விடம், உணவு ஆகியவற்றை அபகரிக்கின்றன. அதனால் இந்த வகை ஆமை, இந்திய சுற்றுச்சூழலுக்கே ஆபத்தாக உள்ளது.

மேலும் செய்திகள்