< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வெம்பக்கோட்டை அகழாய்வில் அரிதான சுடுமண் ஆட்டக்காய் கண்டெடுப்பு
|31 Dec 2024 8:54 PM IST
வெம்பக்கோட்டை அகழாய்வில் அரிதான ஆட்டக்காய் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அகழாய்வில் இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் ஏராளமான சங்கு வளையல்கள், சுடுமண் பொம்மைகள், செப்புக்காசுகள், வேட்டைக்கு பயன்படுத்திய பழங்கால கருவிகள் உள்பட 2,700-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்றைய அகழாய்வு பணியின்போது, சுடுமண்ணால் ஆன நீள்வட்டம், கூம்பு வடிவம் மற்றும் அல்லிமொட்டு வடிவங்களில் ஆட்டக்காய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அல்லிமொட்டு வடிவ ஆட்டக்காயில், தயரித்தவர்களின் கைரேகை பதிவாகியுள்ளது. கைரேகை பதிவான நிலையில் ஆட்டக்காய் அரிதாக கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.