< Back
மாநில செய்திகள்
ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம்
மாநில செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம்

தினத்தந்தி
|
30 Dec 2024 8:33 AM IST

நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 300-க்கும் குறைவான விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இவ்வாறு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர்.

ராமேசுவரம் மீனவர்களை பார்த்ததும் அங்கு விரைந்து சென்ற இலங்கை கடற்படையினர் அவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை அவசர, அவசரமாக வெட்டி எடுத்து கொண்டு கரை திரும்பினர். இலங்கை கடற்படையினரின் இந்த அட்டூழியத்தால் ராமேசுவரம் மீனவர்கள் நேற்று காலை குறைந்த அளவிலான மீன்களுடன் கரை திரும்பினர்.இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

700-க்கும் அதிகமான படகுகள் உள்ள ராமேசுவரத்தில் இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கைக்கு பயந்து குறைந்த அளவிலான படகுகள் மட்டுமே மீன்பிடிக்க கடலுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்