< Back
மாநில செய்திகள்
பழையன கழிதலும், புதியன புகுதலும்  ராமதாஸ் சமூகவலைதள பதிவால் பரபரப்பு
மாநில செய்திகள்

'பழையன கழிதலும், புதியன புகுதலும்' ராமதாஸ் சமூகவலைதள பதிவால் பரபரப்பு

தினத்தந்தி
|
3 Nov 2024 10:33 PM IST

பழையன கழிவதை தடுக்க முடியாது, புதியன வருவதையும் நிறுத்த முடியாது, இரண்டையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்ற பொருள்படும் வகையிலான நன்னூல் வரியை ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது சமூகவலைதள பக்கத்தில் அவ்வப்போது, சமூக பிரச்சினைகள் தொடர்பாக கருத்துக்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் இன்று ராமதாஸ் தனது சமூகவலைதள பக்கத்தில், 'பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என்று பதிவிட்டிருந்தார்.

அதற்கான விளக்கம் எதுவும் தெளிவாக கூறப்படவில்லை. அவர் கூறிய இந்த வரிகள், நன்னூலில் இடம் பெற்றுள்ளது. இதற்கான பொருள் விளக்கம் என்னவென்றால், 'பழையன கழிவதை தடுக்க முடியாது, புதியன வருவதையும் நிறுத்த முடியாது, இரண்டையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்' என்பதாகும். நடிகர் விஜய் அரசியல் பிரவேசத்தை வரவேற்கும் விதமாக ராமதாஸ் இவ்வாறு வெளியிட்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்