< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்: புதிய பாம்பன் பாலத்தில் ரெயில் சோதனை ஓட்டம்
மாநில செய்திகள்

ராமநாதபுரம்: புதிய பாம்பன் பாலத்தில் ரெயில் சோதனை ஓட்டம்

தினத்தந்தி
|
18 Oct 2024 6:23 AM IST

புதிய பாம்பன் பாலத்தில் சரக்கு ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்- ராமேஸ்வரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில், 550 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரெயில் பாலம் அமைக்கும் பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, அண்மையில் நிறைவு பெற்றது. இந்த பாலத்தில் ரெயில் போக்குவரத்தை தொடங்குவதற்கான இறுதிக்கட்ட ஆய்வு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், புதிய பாம்பன் பாலத்தில் மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை சரக்கு ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 14 பெட்டிகளுடன் 90 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சூழலில், பாதுகாப்பு குழுவினர் இறுதிக்கட்ட ஆய்வு செய்த உடன் பாலம் திறக்கும் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் செய்திகள்