ராஜராஜ சோழன் சதய விழா: 1,039 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நடனம்
|ராஜராஜ சோழனின் சதய விழா நேற்று தொடங்கியது.
தஞ்சை,
தஞ்சை பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாள் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் ஆகும். இதையடுத்து மாமன்னன் பிறந்தநாள், சதய விழாவாக தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு 1039-வது சதய விழா நேற்று தொடங்கியது. தொடக்க விழாவை தொடர்ந்து வில்லுப்பாட்டு, கவியரங்கம், தமிழ் இனிமைப்பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. மாலையில் தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பழங்கால இசைக்கருவிகளோடு ஒரே நேரத்தில் 700 நாட்டிய கலைஞர்கள் பங்குபெற்ற நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிலையில், உலகம் வியக்கும் மாமன்னன் ராஜராஜன் என்ற தலைப்பில், ராஜராஜ சோழனுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் 1,039 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பரதம், கோலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. இந்த நாட்டிய நிகழ்ச்சியை ஏராளமானோர் பொதுமக்கள் கண்டுகளித்து வருகின்றனர்.