< Back
மாநில செய்திகள்
சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் இரவே சரிசெய்யப்படும்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
மாநில செய்திகள்

சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் இரவே சரிசெய்யப்படும்- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

தினத்தந்தி
|
30 Nov 2024 9:39 PM IST

பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சென்னை,

சென்னையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

சென்னையில் மழை மற்றும் காற்றின் வேகம் குறைந்துள்ளது. முந்தைய புயல்களை போல் இந்த புயல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. சென்னை வானிலை ஆய்வு மையம் சரியான அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சென்னையில் 143 முகாம்களில் 4,990 நபர்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். 3 லட்சம் நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. சென்னையில் உள்ள 21 சுரங்கப்பாதைகளில் 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழை நீர் இன்று இரவே வெளியேற்றப்படும்.

மின்சாரம் துண்டிப்பு புகார்கள் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது. இயற்கையை மீறி ஒன்றும் செய்ய முடியாது. பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது."

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்