< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர் - நோயாளிகள் அவதி
மாநில செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர் - நோயாளிகள் அவதி

தினத்தந்தி
|
14 Dec 2024 2:50 PM IST

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.

தூத்துக்குடி,

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்து ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் தொடர்ச்சியாக பெய்த கனமழையின் காரணமாக மாநகராட்சியில் உள்ள தாழ்வான பகுதிகளில் பெரும்பாலும் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மிகவும் அவதியடைந்துள்ளனர். தரை தளத்தில் உள்ள நோயாளிகள் மேல் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்குள் தேங்கி நிற்கும் மழைநீரையும் பொருட்படுத்தாமல் மருத்துவர்களும், செவிலியர்களும் தங்கள் பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். அதே சமயம், மாவட்ட நிர்வாகம் சார்பில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகள்