< Back
மாநில செய்திகள்
சென்னையில் மழைநீர் தேக்கம் - மூடப்பட்ட 8 சுரங்கப்பாதைகள்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

சென்னையில் மழைநீர் தேக்கம் - மூடப்பட்ட 8 சுரங்கப்பாதைகள்

தினத்தந்தி
|
15 Oct 2024 4:49 PM IST

சென்னையில் கனமழை காரணமாக 8 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வட திசை நோக்கி நகர்வதால் கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னையில் பெய்த மழை காரணமாக 8 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி

பெரம்பூர் ரெயில்வே சுரங்கப்பாதை

கணேசபுரம் சுரங்கப்பாதை

சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை

மேட்லி சுரங்கப்பாதை

கெங்கு ரெட்டி ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை

வில்லிவாக்கம்

சூரப்பட்டு அண்டர் பாஸ் ஆகியவை தற்போது மூடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்