மழை பாதிப்பு: செந்தூர், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
|மழை பாதிப்பு காரணமாக செந்தூர், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித்தீர்த்தது. தொடர் மழையால் குளம், ஏரி நிரம்பியதுடன், குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மழை வெள்ளம் காரணமாக, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டு உள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மழை வெள்ளம் காரணமாக சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் விரைவு ரெயில் இன்று விழுப்புரத்தில் இருந்தே புறப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து மன்னார்குடி செல்லும் விரைவு ரெயில் இன்று ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 11.55-க்கும் புறப்படும்.
அதைபோல சென்னையில் இருந்து கொல்லம், ராமேசுவரம், கன்னியாகுமரி செல்லும் விரைவு ரெயில்களும் இன்று ஒருமணி தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.