< Back
மாநில செய்திகள்
மழை பாதிப்பு: தவெக தலைவர் விஜய் நிவாரண உதவி
மாநில செய்திகள்

மழை பாதிப்பு: தவெக தலைவர் விஜய் நிவாரண உதவி

தினத்தந்தி
|
3 Dec 2024 2:48 PM IST

பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது.

சென்னை,

வங்கக்கடலில் உருவாகிய பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 29-ம் தேதி இரவு முதல் 30-ம் தேதி மதியம் வரை இடைவிடாமல் மிதமான காற்றுடன் மழை பெய்தது. காலை நேரத்தில் விட்டு விட்டு பெய்த மழை, பின்னர் வெளுத்து வாங்கியது. சில மணிநேரம் இடைவிடாமல் கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

சில இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பரிதவிப்புக்கு உள்ளாகினர். சுரங்கப்பாதைகள் மழைநீரால் நிரம்பி, நீச்சல் குளம் போன்று மாறின. இதனால் சுரங்கப்பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பெரும்பாலான சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. அந்த சமயத்தில் சாலையில் தேங்கிய தண்ணீர் வேகமாக வடிய தொடங்கின. ஒருசில இடங்களில் மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டது. மழை காரணமாக சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் பெஞ்சல் புயல் மற்றம் கனமழையால் பாதிக்கப்பட்ட டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த 250 குடும்பங்களை தவெக தலைமை அலுவலகமான பனையூருக்கு நேரில் வரவழைத்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வழங்கினார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் விஜய் தனித்தனியாக குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்