< Back
மாநில செய்திகள்

சென்னை
மாநில செய்திகள்
பள்ளி கல்வித்துறையில் பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டம்

14 Feb 2025 1:33 PM IST
கல்வித்துறை நிர்வாகம் சார்பில் 14 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 6,500 பேருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்பாட்டம் நடைபெற்றது.
பள்ளி கல்வித்துறையில் 14 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் 6,500 பேருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் த.ல.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சு.ஹரிபாஸ்கர், பொருளாளர் மா.அருண்குமார் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.