< Back
மாநில செய்திகள்
வேளச்சேரி ஏரி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு - போலீஸ் குவிப்பு
மாநில செய்திகள்

வேளச்சேரி ஏரி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு - போலீஸ் குவிப்பு

தினத்தந்தி
|
25 Nov 2024 2:56 PM IST

வேளச்சேரி ஏரி அருகே, பயோமெட்ரிக் கணக்கெடுப்பை நிறுத்த கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை,

சென்னை வேளச்சேரி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கரையில் 800-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை தொடங்கி உள்ளனர். இதற்காக வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு, பயோமெட்ரிக் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதற்கு வேளச்சேரி ஏரியை சுற்றி உள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் வேளச்சேரி ஜெகநாதபுரம் பகுதியில் வசிக்கும் 500க்கும் மேற்பட்டோர் பயோமெட்ரிக் கணக்கெடுப்பை நிறுத்த கோரி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குடியிருப்புவாசிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்