< Back
மாநில செய்திகள்
அரியலூர் மற்றும் பெரம்பலூரில் ரூ.87.94 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
மாநில செய்திகள்

அரியலூர் மற்றும் பெரம்பலூரில் ரூ.87.94 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

தினத்தந்தி
|
15 Nov 2024 3:18 PM IST

அரியலூர் மற்றும் பெரம்பலூரில் ரூ.87.94 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

சென்னை,

அரியலூரில் நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மொத்தம் ரூ.87.94 கோடி செலவிலான 507 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.120.04 கோடி மதிப்பீட்டிலான 53 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.173.96 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 21,862 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (15.11.2024) அரியலூரில் நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மாவட்டத்தில் 17 கோடியே 24 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் 51 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 39 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 70.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10,141 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் 70 கோடியே 69 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் 456 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 80 கோடியே 60 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 27 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 103.22 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 11,721 பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல். திருமாவளவன், ஆ. ராசா, சட்டமன்ற உறுப்பினர்கள் எம். பிரபாகரன், கே.சின்னப்பா, க.சோ.கா.கண்ணன், அரியலூர் மாவட்ட கலெக்டர் பொ. ரத்தினசாமி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்