< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணய விவகாரம் - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
|16 Nov 2024 7:05 PM IST
தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணய விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி, தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள் உள்ளிட்ட தனியார் தொழிற்கல்வி கல்லூரிகளுக்கு, கட்டண நிர்ணய குழுவை நியமித்தது. நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையிலான இந்த குழு, கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இரண்டு வாரங்களில் மனு குறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், கட்டண நிர்ணய குழுவுக்கும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.