< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
|9 Nov 2024 7:43 AM IST
சங்ககிரி அருகே தனியார் பஸ் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கலியனூரில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பஸ் ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
பஸ் கவிழ்ந்தவுடன் திடீரன தீப்பிடித்து எறியத் தொடங்கிய நிலையில், உள்ளே இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் இருசக்கர வாகனம் மீது பஸ் மோதியதில் பெரியசாமி (60) என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்து குறித்து சங்ககிரி டிஎஸ்பி ராஜா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.