< Back
மாநில செய்திகள்
கிண்டி அரசு மருத்துவமனையில் மின்தடை..நோயாளிகள் பாதிப்பு
மாநில செய்திகள்

கிண்டி அரசு மருத்துவமனையில் மின்தடை..நோயாளிகள் பாதிப்பு

தினத்தந்தி
|
16 Nov 2024 10:32 PM IST

மின்தடையால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்

சென்னை,

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று இரவு திடீரென மின்தடை ஏற்பட்டது . 2 மணிநேரத்திற்கு மேலாக ஏற்பட்ட மின்தடையால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். மின்சாரம் செல்லக்கூடிய கேபிள்களில் ஏற்பட்ட தீ விபத்தால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ கூறியதாவது ,

மருத்துவமனை முழுவதிலும் விரைவில் மின் விநியோகம் சீராகும். அவசர சிகிச்சை பிரிவில் உள்ளோருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அங்கு தனி ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது . நோயாளிகள் பயப்படும் அளவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அனைத்து வார்டுகளிலும் சென்று நோயாளிகளை சந்தித்தோம். என தெரிவித்தார்

மேலும் செய்திகள்