< Back
மாநில செய்திகள்
விடுமுறை விடப்பட்ட 19 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு
மாநில செய்திகள்

விடுமுறை விடப்பட்ட 19 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
12 Dec 2024 7:45 AM IST

விடுமுறை விடப்பட்ட 19 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

சென்னை,

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் வடமாவட்டங்களில் இன்றும் (வியாழக்கிழமை) கனமழை பெய்யும் என்றும், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவாரூர் செங்கல்பட்டு ராணிப்பேட்டை, கரூர், திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி, திருவள்ளூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனமழையால் விடுமுறை விடப்பட்ட 19 மாவட்டங்களில் இன்று நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு இன்று ஆங்கில தேர்வு நடக்க இருந்தது; ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்