< Back
மாநில செய்திகள்
பொங்கல் பண்டிகை: தாம்பரம் - திருச்சி இடையே நாளை முதல் சிறப்பு ரெயில் இயக்கம்
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகை: தாம்பரம் - திருச்சி இடையே நாளை முதல் சிறப்பு ரெயில் இயக்கம்

தினத்தந்தி
|
3 Jan 2025 4:27 PM IST

பொங்கல் பண்டிகையையொட்டி தாம்பரம் - திருச்சி இடையே நாளை முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் வசதிக்காகவும் திருச்சி - தாம்பரம், தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு அதிவிரைவு ரெயில் இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாம்பரம் - திருச்சி அதிவிரைவு சிறப்பு ரெயில் வண்டி எண் (06191) நாளை முதல். 4,5,10,11,12,13,17,18,19 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும்.

மறுமார்க்கமாக திருச்சி - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரெயில் வண்டி எண் (06190) நாளை முதல் 4,5,10,11,12,13,17,18,19 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரெயிலானது தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருத்துவத்தூர், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும். இருமார்க்கத்திலும் 9 நாட்களுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்