< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1.47 கோடி மோசடி - காவல் ஆய்வாளர் அதிரடி கைது
|24 Nov 2024 9:51 AM IST
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.47 கோடி மோசடி செய்த புகாரில் காவல் ஆய்வாளர் ஏசுராஜசேகரன் கைது செய்யப்பட்டார்.
ஏசு ராஜசேகரனை போலீஸ் கைது செய்த நிலையில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முன்னதாக இன்ஸ்பெக்டர் ஏசுராஜசேகரன் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டி.ஐ.ஜி. உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர் ஏசுராஜசேகரனை குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.