< Back
மாநில செய்திகள்
விஷ சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்: அ.தி.மு.க. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி- எடப்பாடி பழனிசாமி
மாநில செய்திகள்

விஷ சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்: அ.தி.மு.க. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி- எடப்பாடி பழனிசாமி

தினத்தந்தி
|
20 Nov 2024 5:44 PM IST

விஷ சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்களுக்கு உரிய நீதிவேண்டியும், சிபிஐ விசாரணை கோரியும் தொடர்ந்து சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்துத் தளங்களிலும் போராடிய முதன்மையான இயக்கம் அ.தி.மு.க. நமது தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக, அ.தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கில், கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

விஷ சாராய மரணங்கள் குறித்து மடியில் கனமில்லை என்றால் விடியா திமுக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யக் கூடாது. சிபிஐ விசாரணை மூலம் உயிரிழந்த 67 பேருக்கும் உரிய நீதி கிடைக்கட்டும். என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்