< Back
மாநில செய்திகள்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்
மாநில செய்திகள்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்

தினத்தந்தி
|
10 Jan 2025 7:14 PM IST

போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழும் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்குப் பரிசு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

தமிழ் வளர்ச்சித் துறையின் அனைத்து மாவட்டங்களிலும் 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு அப்போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பெற்று வருகின்றனர்.

சென்னை மாவட்டத்தில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 21.01.2025 அன்று அண்ணாசாலை, மதராசா ஐ ஆசாம் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்கு போட்டிகள் தொடங்கி நடைபெறும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழும் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்குப் பரிசு பாராட்டுச் சான்றிதழும் பின்வருமாறு வழங்கப்படும்.

மாவட்டப்போட்டி பரிசுத் தொகை விவரம் (பள்ளி)

பரிசு விவரம்: கவிதைப்போட்டி கட்டுரைப்போட்டி பேச்சுப்போட்டி

முதல் பரிசு ரூ. 10,000/- ரூ. 10,000/- ரூ.10,000/-

இரண்டாம் பரிசு ரூ. 7,000/- ரூ. 7,000/- ரூ. 7,000/-

மூன்றாம் பரிசு ரூ. 5,000/- ரூ. 5,000/- ரூ.5,000/-

கல்லூரி மாணவர்களுக்கு 22.01.2025 அன்று அண்ணாசாலை, காயிதே மில்லத் அரசு மகளில் கல்லூரியில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறும். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழும் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்குப் பரிசு பாராட்டுச் சான்றிதழும் பின்வருமாறு வழங்கப்படும்.

மாவட்டப்போட்டி பரிசுத் தொகை விவரம் (கல்லூரி)

பரிசு விவரம்: கவிதைப்போட்டி கட்டுரைப்போட்டி பேச்சுப்போட்டி

முதல் பரிசு ரூ. 10,000/- ரூ. 10,000/- ரூ.10,000/-

இரண்டாம் பரிசு ரூ. 7,000/- ரூ. 7,000/- ரூ. 7,000/-

மூன்றாம் பரிசு ரூ. 5,000/- ரூ. 5,000/- ரூ.5,000/-

மாநிலப் போட்டி:

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மாவட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவில் 28.01.2025 அன்று 11,12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும், 29.01.2025 அன்று கல்லூரி மாணவர்களுக்கும் சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினையும் பெறுவர். மாநிலப் போட்டிக்குரிய பரிசுத் தொகை விவரம் பின்வருமாறு.

மாநிலப்போட்டி பரிசுத் தொகை விவரம்:

(பள்ளி / கல்லூரி)

பரிசு கவிதைப்போட்டி கட்டுரைப்போட்டி பேச்சுப்போட்டி

பரிசு விவரம்: கவிதைப்போட்டி கட்டுரைப்போட்டி பேச்சுப்போட்டி

முதல் பரிசு ரூ.15,000/- ரூ.15,000/- ரூ.15,000/-

இரண்டாம் பரிசு ரூ.12,000/- ரூ.12,000/- ரூ.12,000/-

மூன்றாம் பரிசு ரூ.10,000/- ரூ.10,000/- ரூ.10,000/-

மாவட்ட (ம) மாநிலப் போட்டிகளுக்குரிய மொத்தப் பரிசுத் தொகை ரூ. 52,38,000/- (ரூபாய் ஐம்பத்து இரண்டு இலட்சத்து முப்பத்தெட்டாயிரம் மட்டும்) வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்