< Back
மாநில செய்திகள்
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
மாநில செய்திகள்

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

தினத்தந்தி
|
14 Nov 2024 4:28 PM IST

பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை,

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் ஒருசில பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

15.11.2024 வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிக்காக மின்நிறுத்தம்

சென்னையில் 15.11.2024 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும். மின் தடை செய்யப்படும் இடங்கள் விபரம்

கும்மிடிப்பூண்டி: கனிஷ்க், அருண் ஸ்மெல்டர்ஸ், செஞ்சுரி ப்ளைவுட் மற்றும் மிட்சுபா நுகர்வோர், தாழ்வழுத்த நுகர்வோர் எளாவூர் பஜார், சுண்ணாம்புகுளம், பெத்திக்குப்பம், கயிலார் மேடு, ஆரம்பாக்கம் பஜார், நொச்சிக்குப்பம், எகுமதுரை, எடூர் கும்பிளி, தோக்கமூர், தண்டலம் மற்றும் பகுதிகளை உள்ளடக்கியது.

ஈஞ்சம்பாக்கம்: நைனார்குப்பம், மீனாட்சி படிவம், விஜிபி பகுதி-1, விஜிபி பகுதி-2, ரகுவரந்தோட்டம், ரங்கநாதன் அவென்யூ, ஜுகு பீச், ராஜன் சாலை, கேகேஆர் படிவம், அருணா படிவம், ஐஎம்யு எச்டி சர்வீஸ், ராகஸ் பல் மருத்துவக் கல்லூரி, ஈடன் கார்டன் (எம்ஜிஆர்), பி.வி.ஆர்.சினிமாஸ், உத்தண்டி கிராமம், பாலம்ஸ் ஸ்பிரிங், ராஜீவ் காந்தி நகர், செங்கோதை அம்மன் கோயில் தெரு, பிடாரியம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, செங்கேனியம்மன் கோயில் தெரு, கண்ணபிரான் கோயில் தெரு, தண்டுமாரியம்மன் கோயில் தெரு, வீரபத்திரன் கோயில் தெரு.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்