சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
|பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மதியம் 2.00 மணிக்கு மின்விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் நாளை (திங்கட்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
ராயபுரம்: கிழக்கு கல்மண்டபம், மேற்கு கல்மண்டபம், எஸ்.என்.செட்டி தெரு, எம்.எஸ்.கோயில் தெரு, ஹுசைன் மேஸ்திரி தெரு, ஷேக்மேஸ்திரி தெரு, மேற்கு மாதா கோயில் தெரு, பக்கிரி ஷாஹிப் தெரு, பி.வி.கோயில் தெரு, என்.ஆர்.டி.ரோடு, கிழக்கு மாதா தெரு, ரயில்வே அச்சகம், முத்தியால்பேட்டை, தம்பு லேன், மார்க்கெட் லேன், லோட்டஸ் ராமசாமி தெரு, ஏ.ஜே.காலனி, காசிமா நகர், ஜீவரத்தினம் குவார்ட்டர்ஸ், ஜி.எம்.பேட்டை மற்றும் புதிய வண்ணாரப்பேட்டை பகுதி.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.