< Back
மாநில செய்திகள்
நெல்லை திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைப்பு
மாநில செய்திகள்

நெல்லை திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைப்பு

தினத்தந்தி
|
16 Nov 2024 4:52 PM IST

சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை,

நெல்லையில் மேலப்பாளையம் பகுதியில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்க வளாகத்திற்குள் இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடி விட்டனர். மொத்தம் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு உள்ளன.இதனால், பொருட்சேதம் எதுவும் இல்லை. சம்பவம் பற்றி சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் , பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படையும் , உதவி ஆய்வாளர்கள் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது .

மேலும் செய்திகள்