பெரியார் நினைவு நாள்: பாரபட்சமில்லாத சமூகம் நோக்கி வளர்வோம் - கமல்ஹாசன்
|தன் சொற்களுக்குப் பொருத்தமாக வாழ்ந்தும் காட்டியவர் தந்தை பெரியார் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
சமூகத்தில் தென்படும் இழிநிலையைச் சகித்துக்கொள்ளாதவர் தந்தை பெரியார். உயர்வு தாழ்வற்ற சமநிலை மனிதர்களுக்கிடையே நிலவ வேண்டும் என்பதற்காகத் தன் வாழ்நாளையே செலவிட்டுப் பரப்புரை செய்தவர். தன் சொற்களுக்குப் பொருத்தமாக வாழ்ந்தும் காட்டியவர்.
கொண்ட கொள்கையை இறுதிவரை எடுத்தியம்பிய தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவரது வழிகாட்டுதல்களைக் கைக்கொள்வோம். பாரபட்சமில்லாத சமூகம் நோக்கி வளர்வோம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 37-வது ஆண்டு நினைவையொட்டி அவர் தனது மற்றொரு பதிவில், "நான் குழந்தையாகத் தவழ்ந்த நேரத்தில் மடி ஒன்றைக் கொடுத்தவர்; நான் சிறுவனாக சினிமா புகுந்த காலத்தில் நட்சத்திரமாக முன்னோடியவர்; மக்கள் மனம் கவர்வதில் எனக்கு மானசீகப் பாடம் நடத்தி ஆசிரியர் ஆனவர்... அன்புக்கும் மரியாதைக்குமுரிய உறவாக நிலைத்துவிட்ட எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாள் இன்று. எந்நாளும் மறையாத நினைவுகளைத் தந்தவரை இந்நாளில் வணங்குகிறேன்" என்று அதில் கமல் ஹாசன் பதிவிட்டுள்ளார்.