< Back
மாநில செய்திகள்
2026 சட்டசபை தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள்-சசிகலா
மாநில செய்திகள்

2026 சட்டசபை தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள்-சசிகலா

தினத்தந்தி
|
8 Dec 2024 7:21 AM IST

வருகிற 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் திமுகவிற்கு சரியான தீர்ப்பு வழங்குவார்கள் என்று சசிகலா கூறினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேற்று சசிகலா பார்வையிட்டார். தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அவர் வழங்கினார்.பின்னர் சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. அரசு மத்திய அரசை குறை கூறுகிறது. ரூ.2 ஆயிரம் கோடி மழை வெள்ள நிவாரணத்துக்கு தேவை என்று மத்திய அரசை கேட்கின்றனர். தி.மு.க. அரசின் மக்கள் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட மக்களையும், பாதிக்கப்பட்ட பகுதிகளையும், மழை வெள்ள சேதாரத்தையும் பார்க்கவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்காமலேயே மத்திய அரசிடம் 2 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று கணக்கு போட்டு கேட்கின்றனர். வருகிற 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் அவர்களுக்கு சரியான தீர்ப்பு வழங்குவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்