< Back
மாநில செய்திகள்
முன்பதிவில் உச்சம்: ஒரே நாளில் சிறப்பு பஸ்களில் 79,626 பேர் பயணம்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

முன்பதிவில் உச்சம்: ஒரே நாளில் சிறப்பு பஸ்களில் 79,626 பேர் பயணம்

தினத்தந்தி
|
4 Nov 2024 9:20 AM IST

ஒரே நாளில் சிறப்பு பஸ்கள் மூலம் 79,626 பேர் பயணம் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் 2,561 சிறப்பு பஸ்களும், பல்வேறு இடங்களிலிருந்து வழக்கமாக இயங்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக 3,912 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கத்தில், தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர் தமிழகத்தின் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காகவும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காகவும் நேற்றைய தினம் 03.11.2024 ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பஸ்களின் இயக்கம் நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, பிற இடங்களிலிருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் 2,561 சிறப்பு பஸ்கள் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கு வழக்கமாக இயக்கக் கூடிய பஸ்களுடன் கூடுதலாக 3,912 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

மேலும், நேற்று (03.11.2024) மட்டும் 79,626 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இது முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்ட பயணிகள் எண்ணிக்கையின் அதிகபட்ச உச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்