< Back
மாநில செய்திகள்
பாம்பன் கலங்கரை விளக்கம்: பொதுமக்கள் பார்வையிட அனுமதி
மாநில செய்திகள்

பாம்பன் கலங்கரை விளக்கம்: பொதுமக்கள் பார்வையிட அனுமதி

தினத்தந்தி
|
10 Dec 2024 7:53 PM IST

பாம்பன் கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனில் 122 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கலங்கரை விளக்கம், 2003-ம் ஆண்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

இங்கிருந்து பார்த்தால், வடக்கில் 15 கி.மீ. தொலைவில் உள்ள ராமநாதசுவாமி கோவிலின் கோபுரத்தையும், தெற்கில் குருசடை தீவு மற்றும் அருகில் உள்ள தீவுகளையும், மேற்கில் பாம்பன் பாலங்களையும், ராமேஸ்வரம் தீவின் மொத்த அழகையும் பார்க்க முடியும். இவற்றை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிட தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒரு நபருக்கு பத்து ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்